தூத்துக்குடி
விளாத்திகுளம் அருகே 3 தோட்டங்களில்காப்பர் ஒயர்களை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்
|விளாத்திகுளம் அருகே 3 தோட்டங்களில் காப்பர் ஒயர்களை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே 3 தனியார் தோட்டங்களில் காப்பர் ஒயர்களை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து காப்பர் ஒயர்களை மீட்ட ேபாலீசார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
காப்பர் ஒயர் திருட்டு
விளாத்திகுளம் அருகேயுள்ள விருசம்பட்டி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் ராமகிருஷ்ணன் (வயது 43). இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியிலுள்ள ஆற்று படுகை அருகே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிருந்த 100 மீட்டர் காப்பர் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த தோட்டத்தில் விளாத்திகுளம் பங்களா தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் வின்சென்ட் (21), கீழ விளாத்திகுளம் மாடசாமி மகன் பிரதீப்(27) ஆகிய இருவரும் காப்பர் ஒயர்களை திருடியதும், அதேபகுதியிலுள்ள சுந்தரராஜ், போத்தையா ஆகியோரின் தோட்டங்களில் இருந்தும் 80 மீட்டர் காப்பர் ஒயர்களை அவர்கள் திருடி சென்றதும் தெரிய வந்தது.
2 பேர் கைது
இதை தொடர்ந்து விளாத்திகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அந்த 2 பேரையும் கைது செய்து, திருடப்பட்ட காப்பர் ஒயர்களை மீட்டனர். மேலும், அவர்கள் திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.