< Back
மாநில செய்திகள்
2 பதிவெண்களுடன் நின்ற கார் பறிமுதல்
மதுரை
மாநில செய்திகள்

2 பதிவெண்களுடன் நின்ற கார் பறிமுதல்

தினத்தந்தி
|
26 Dec 2022 1:14 AM IST

2 பதிவெண்களுடன் நின்ற கார் பறிமுதல்


மதுரை கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டீஸ்வரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆரப்பாளையம் வைகை ஆற்றுப்பகுதியில் 2 பதிவெண்கள் பொருத்திய கார் ஒன்று நின்றது.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். விசாரணையில், அந்த கார் சென்னையை சேர்ந்த பிரியங்கா என்பவரது பெயரில் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்