< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
|7 Jun 2022 10:01 PM IST
இராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இராமேஸ்வரம்,
ராமலிங்க சுவாமி பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு நாளை முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் என ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், ராமலிங்க சுவாமி பிரதிஷ்டை திருவிழா தொடங்கியுள்ளது. இதனையொட்டி நாளை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜையும், 6 கால பூஜையும் நடைபெறும் எனவும், பின்னர் இரவில் நடை திறக்கப்பட்டு, இரவு கால பூஜை நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
இதன்காரணமாக நாளை முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் என்றும், நாளை கோயிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.