< Back
மாநில செய்திகள்
வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி: இசையமைப்பாளருக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு தடை
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி: இசையமைப்பாளருக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு தடை

தினத்தந்தி
|
2 Jun 2023 2:16 AM IST

வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி: இசையமைப்பாளருக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை தமிழ்நாட்டில் ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். அப்போது இந்த காருக்கு, நுழைவு வரியாக 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 ரூபாயை செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, அபராதத்துடன் நுழைவு வரியை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி, அபராதமாக ரூ.11 லட்சத்து 50 ஆயிரத்து 952-யை செலுத்தும்படி ஹாரிஸ் ஜெயராஜுக்கு போக்குவரத்துத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வக்கீல் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, மனுதாரருக்கு மட்டும் அபராதம் விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளது பாரபட்சம் என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்