< Back
மாநில செய்திகள்
பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்- அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
சிவகங்கை
மாநில செய்திகள்

பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்- அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

தினத்தந்தி
|
3 Oct 2023 12:30 AM IST

தமிழக அரசு பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மாவட்ட மாநாடு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு சிவகங்கை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பாண்டி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில துணை தலைவர் செல்வராணி தொடக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷணன் வேலைஅறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் மாரி, நிதி நிலை அறிக்கை சமர்பித்தார்.

சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வீரையா, ஊரக வளர்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் வேலுச்சாமி, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கிங்ஸ்டன் டேவிட், முன்னாள் படைவீரர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் சூரியபிரகாசம், வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சேகர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். மாநில பொதுச்செயலாளர் செல்வம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

பழைய பென்சன் திட்டம்

கூட்டத்தில் மாவட்ட தலைநகரமான சிவகங்கையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகைப்படியை உயர்த்தி தர வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியான பழைய பென்சன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

இந்தியாவில் 4 மாநிலங்களில் பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் கொடுத்ததை மத்திய அரசு செயல்படுத்தாமால் கிடப்பில் உள்ளதை விரைவில் செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்