< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கனமழை பாதிப்பு; மக்களுக்கு உதவுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் அறிவுறுத்தல்
|16 Nov 2023 1:00 PM IST
கண்ணம்மாபேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அரிசி பைகளை வழங்கினார்.
சென்னை,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 3 கிலோ அரிசி பைகளை வழங்கினார். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.