பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு - தேர்வுத்துறை
|பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டது.
சென்னை,
சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.07 % சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99 % மாணவர்கள் 84.6 % தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றது.வேலூர் மாவட்டம் 80.02% தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பெற்றது.
இந்நிலையில் இந்த பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு எழுதுவதற்கான அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உடனடி தேர்வுக்கு வரும் 29 முதல் ஜூலை 6 வரை அந்தந்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை கூறியுள்ளது.