< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விஷ சாராய விவகாரம்; கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை
|23 Jun 2024 9:39 AM IST
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 57 பேர் பலியான நிலையில், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே கல்வராயன் மலைப்பகுதியில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கல்வராயன் மலையடிவாரப் பகுதிகளான பொட்டியம், மாயம்பாடி, மளிகைப்பாடி, கல்படை, மட்டபாறை, பரங்கிநத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் கச்சிராயபாளையம், பரிக மண்மலை, செல்லம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாராய விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாராய வியாபாரிகளை தேடும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.