< Back
மாநில செய்திகள்
தோட்டங்களில் சட்டவிரோத மின்வேலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தோட்டங்களில் சட்டவிரோத மின்வேலி

தினத்தந்தி
|
5 April 2023 12:30 AM IST

சிறுமலை பகுதியில் தோட்டங்களில் சட்டவிரோத மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா என்று வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மின்வேலி, மின்கம்பிகளில் சிக்கி உயிரிழந்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள தோட்டங்களில் வனத்துறையினர் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும்படி மண்டல வனப்பாதுகாவலர் பத்மா உத்தரவிட்டார்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் கிரண் அறிவுரையின்படி சிறுமலை வனச்சரகர் மதிவாணன் தலைமையில், மின்சார வாரியத்தின் சின்னாளப்பட்டி உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், காந்திகிராமம் உதவி மின்பொறியாளர் சேகர் மற்றும் வனத்துறையினர் சிறுமலை வனப்பகுதியை ஒட்டிய இ்டங்களில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது சிறுமலையை ஒட்டிய பகுதிகளில் தாழ்வாக மின்கம்பிகள் செல்கிறதா? தோட்டங்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டு இருக்கிறதா? சோலார் மின்வேலியில் அதிகப்படியான மின்சாரம் செலுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் இதுதொடர்பாக தனியார் தோட்ட உரிமையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினா்.

Related Tags :
மேலும் செய்திகள்