< Back
மாநில செய்திகள்
இளையான்குடியில் ஆசிரியர் தின விழா
சிவகங்கை
மாநில செய்திகள்

இளையான்குடியில் ஆசிரியர் தின விழா

தினத்தந்தி
|
7 Sept 2023 1:45 AM IST

கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

இளையான்குடி,

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதுகலை வணிகவியல் துறை சார்பாக ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. துறைத் தலைவர் நைனா முஹம்மது அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினரை உதவி பேராசிரியர் நசீர் கான் அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மேனாள் விலங்கியல் துறை தலைவர் முஹம்மது பாரூக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பட்டய சான்றிதழ் பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியாக உதவி பேராசிரியர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார். வணிகவியல் துறை மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்