< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்
|12 Aug 2024 4:56 PM IST
கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சென்னை,
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. கல்லூரிகளின் கட்டமைப்பு, செயல்பாடு, ஊக்குவிக்கும் திறன், கல்வி கற்பித்தல் முறை பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், கல்வி நிறுவனங்களின் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தை பிடித்துள்ளது.
சென்னை ஐஐடி, ஒட்டுமொத்த பிரிவில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக முதல் இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 6-வது முறையாக சென்னை ஐஐடி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. பெங்களூரு, மும்பை, டெல்லி ஐஐடிக்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.