< Back
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
தர்மபுரி
மாநில செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
18 April 2023 12:30 AM IST

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேன்கனிக்கோட்டையில் நேற்று மாலை சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி செல்லக்குமார் எம்.பி. விழாவை தொடங்கி வைத்தார். அனைத்து மதத்தினரும் இப்தார் விருந்தில் பங்கேற்று உணவு சாப்பிட்டனர். இதில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநில செயலாளர் தேன்கு அன்வர், நகர தலைவர் பால்ராஜ், பி.சி.சி. தலைவர் சீனிவாசன், மேற்கு மாவட்ட துணை செயலாளர் கீர்த்தி கணேஷ், மாவட்ட துணைத்தலைவர் சபியுல்லா, முன்னாள் நகர தலைவர் தாஸ், ரியல் எஸ்டேட் அதிபர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்