< Back
மாநில செய்திகள்
சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
19 April 2023 12:15 AM IST

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.

ஆர்.எஸ்.மங்கலம்

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூரில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆனந்தூர் கிளையின் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் ஆனந்தூர் பட்டாணி மீரான் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சாதிக் பாஷா, முத்துப்பட்டினம் பங்குத்தந்தை அற்புத அரசு, ஆர்.எஸ்.மங்கலம் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், காங்கிரஸ் மாநில செயலாளர் தெய்வேந்திரன், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் ராதிகா பிரபு, மாவட்ட ஆதிதிராவிட நல விழிப்புணர்வு குழு உறுப்பினர் பிரபு, துணை தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டி, முஸிரியா பேகம் புரோஸ்கான், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் சகுபர்அலி, மாவட்ட செயலாளர் ஜிப்ரி, மாவட்ட செயலாளர் ஜாவித் அஸ்லாம் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆர்.எஸ்.மங்கலம் த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் ரைசூல் இஸ்லாம் வரவேற்றார். இப்தார் நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாவட்ட துணை தலைவர் யான்பு இப்ராஹிம், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் வெற்றிவேல், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராஜ், மலேசியா மண்டல செயலாளர் இர்ஷாத், ம.ம.க. ஒன்றிய செயலாளர் காமராஜ், பொருளாளர் அசரப்அலி, ஒன்றிய செயலாளர் இக்ஸான், கிளை செயலாளர் சாகுல், பொருளாளர் யாசின், ம.ம.க. செயலாளர் சேட் இப்ராஹிம் மற்றும் ஆனந்தூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். முடிவில் த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் உபயதுல்லா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்