< Back
மாநில செய்திகள்
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
17 April 2023 2:45 AM IST

பாளையங்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் நேற்று சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐ.என்.டி.யு.சி. நெல்லை மாவட்ட தலைவர் உமாபதி சிவன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார்.

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், காங்கிரஸ் முரளி ராஜா, பல்சமய உரையாடல் பணிக்குழு மை.பா.ஜேசுராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. கோதர் மைதீன், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்