< Back
மாநில செய்திகள்
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
22 April 2023 12:15 AM IST

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி


நாகூர் தர்காவில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முஹம்மது காஜி ஹுசைன் சாஹிப் உள்பட அரசு அதிகாரிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள், மும்மதத்தினர் கலந்து கொண்டனர்.

இதேபோல வேதாரண்யத்தை அடுத்த சர்வ கட்டளை பள்ளிவாசலில் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேலும் செய்திகள்