தென்காசி
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
|இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் ஒன்றியம் திரிகூடபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் ரமலான் பெருநாளை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
திரிகூடபுரம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முத்தையாபாண்டி, கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திரிகூடபுரம் தி.மு.க. தெற்கு கிளை செயலாளரும், ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான செய்யது மீரான் வரவேற்றார். முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஷீத் பைஜி கிராத் ஓதினார். நிகழ்ச்சியில் பள்ளிவாசல் தலைவர் முகமது யூசுப், பொருளாளர் வாவா கனி, இளைஞரணி செயலாளர் சதாம், துணை செயலாளர் அஜ்மீர், கே.ஆர்.யாசின் மற்றும் ஊர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான பங்கேற்றனர்.
* தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு, நெல்லை ஷிபா ஆஸ்பத்திரி சார்பில் ரமலான் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் தலைமை தாங்கினார். மின்வாரிய அதிகாரி ரபீக் பின் ஹூஸைன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் தென்காசி முகமது அலி வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சித்திக், தொழிலதிபர் முஹம்மது ரபி உதவிகளை வழங்கினார். தி.மு.க. மாணவரணி அஸார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
100-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு ரமலான் பண்டிகையை முன்னிட்டு பித்ரா அரிசி மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன.