< Back
மாநில செய்திகள்
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
18 April 2023 3:39 AM IST

கல்லிடைக்குறிச்சியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

அம்பை:

கல்லிடைக்குறிச்சி சின்னப்பள்ளிவாசல் முன் வளாகத்தில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் அசரப் ஹூசைன் தலைமை தாங்கினார். ஆசிரியர் உமர்பாரூக் வரவேற்று பேசினார். முகம்மது கமால், முகம்மது சரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கிபாண்டி, திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பண்டாரசிவன், கோமதி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் குமார், கன்னிமார் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் ஞானசேகரன், மர வியாபாரிகள் சங்க தலைவர் மார்ட்டின், கவுன்சிலர் ஜார்ஜ் ராபர்ட், பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அப்துல் மஜீத், சத்திரம் தெரு ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது, தொழிலதிபர்கள் அப்துல்காதர், திவான் ஒலி, அசன் அலி, செய்யது அகமது, நாகூர்மைதீன், பீர்முகம்மது, அசன் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், சின்னப்பள்ளிவாசல் தெரு ஜமாத் தலைவர் ஒலிமாலிக் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ரசாக் தலைமையில் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்