< Back
மாநில செய்திகள்
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
18 April 2023 12:15 AM IST

நாகூரில், போர்ட்டவுன் அரிமா சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகூரில் உள்ள ஹமீதியா மஹாலில் நாகை போர்ட் டவுன் அரிமா சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரிமா சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், ஆடிட்டர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை செல்வராஜ் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் மும்மதத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்