தென்காசி
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
|சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில்- கழுகுமலை சாலையில் உள்ள பழனி பாபா திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர தலைவர் அப்துல் நசீர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஷேக் திவான் அலி தொகுப்புரையாற்றினார். நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகமது, நகரத் துணைத் தலைவர் முருகன், நிர்வாகிகள் ஹா௹ன், மைதீன், பீர் மைதீன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகர வர்த்தக சங்கத் தலைவர் முத்தையா, ஆதி தமிழர் பேரவை தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் முருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் நிஜாம், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் பீர் ரகுமான், மக்கள் தேசம் கட்சி நகர செயலாளர் முத்துக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், நிர்வாகி குட்டி வளவன், நகர ம.தி.மு.க. செயலாளர் ரத்னவேல் குமார், செங்குந்தர் முன்னேற்ற சங்க தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் பீர் மைதீன் நன்றி கூறினார்.