சிவகங்கை
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
|இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இளையான்குடி,
இளையான்குடியில் சமத்துவ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி., காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் அல்அமீன், நகர தலைவர் ஜபருல்லாஹ்கான், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் செல்லப்பாண்டி, சிறுபான்மை பிரிவு தலைவர் அம்பலம் ராவுத்தர் நைனார், கவுன்சிலர் ஷேக் தாவுது, நகர் செயலாளர் பாண்டி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் குமார், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் முகம்மது, ஒன்றிய கவுன்சிலர் முருகானந்தம், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு செயலாளர் கரீம், இளையான்குடி ஜமாத்தார்கள், பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.