< Back
மாநில செய்திகள்
மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு

தினத்தந்தி
|
19 April 2023 12:15 AM IST

குலசேகரத்தில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு

குலசேகரம்,

திருவட்டார் ஒன்றிய திருவருட்பேரவை சார்பில் மதநல்லணிக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி குலசேகரத்தில் நடைபெற்றது. குலசேகரம் காவல்ஸ்தலம் செட்டித்தெருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பொருளாளர் ஷாஜகான் வரவேற்றார். பேரவை துணைத்தலைவர் ஜேம்ஸ்ராஜ், குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொல்வேல் பங்கு அருட்பணியாளர் ஓய்சிலின் சேவியர், குலசேகரம் இமாம் அப்துல்காதர் மன்னானி, குலசேகரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜரெத்தினம், சி.எஸ்.ஐ. ஆலய செயலாளர் ஜெஸ்டின், திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா, வார்டு கவுன்சிலர் ராஜிலா, தனியார் கல்லூரி பேராசிரியர் அன்சார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவருட்பேரவை செயலாளர் மெர்லின் உஷா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்