நீலகிரி
மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
|மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் கமிட்டி தலைவர் தாஜ்தீன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிக்கந்தர் பாவா வரவேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசும்போது, மனித நேயத்தை கொண்டு வந்தது இஸ்லாமிய சமுதாயம்தான், கருணாநிதியின் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு என பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்றார். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பேசினர். பின்னர் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷண குமார், நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் குணசீலன், வெங்கடேசன், உமா சங்கர், தாசில்தார் காயத்ரி, நெல்லை கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, மாரியம்மன் கோவில் கமிட்டி தலைவர் வடிவேல், கோத்தகிரி ஆரோக்கிய மாதா ஆலய பங்கு தந்தை ஞானதாஸ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் பள்ளிவாசல் கமிட்டி செயலாளர் சாகுல் அமீது நன்றி கூறினார்.