< Back
மாநில செய்திகள்
மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
தென்காசி
மாநில செய்திகள்

மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
4 April 2023 12:15 AM IST

கடையநல்லூரில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

கடையநல்லூர்:

கடையநல்லூரில் நகர இப்தார் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.பி.காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ராம்மோகன், அப்துல்லா யூசுப், பஷீர்முகமது, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகவேல் வரவேற்றார்.

விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் செல்லக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அசோகன், சதன் திருமலைக்குமார் மற்றும் திருச்சி வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ரவிஅருணன், ஹிதாயத்துல்லா, பேராயர் எட்வர்ட்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனிஅருள்சிங், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் பாக்யராஜ், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் யாசர்கான், ஜாபர்அலி உஸ்மானி உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்தார் கமிட்டி செயலாளர் ஷாநவாஸ்கான் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்