< Back
மாநில செய்திகள்
திறமையுடன் துணிவும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்- சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்
ஈரோடு
மாநில செய்திகள்

திறமையுடன் துணிவும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்- சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்

தினத்தந்தி
|
10 Sept 2023 3:58 AM IST

திறமையுடன் துணிவும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கூறினாா்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள விண்ணப்பள்ளியில் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, 'திறமையும், துணிவும் இருந்தால் எதையும் உங்களால் சாதிக்க முடியும். தாய்-தந்தையர்களை பேணி காக்க வேண்டும், நீங்கள் படித்த கல்லூரி மற்றும் ஆசிரியர்களை எப்போதும் மறக்க கூடாது. படித்த கல்லூரிக்கு எப்போதும் உதவ வேண்டும். எதிலும் உண்மையாக, நேர்மையாக செயல்பட வேண்டும்' என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்