< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'பாராட்ட முடியாவிட்டால் அமைதியாக இருங்கள்' - குஷ்புவின் கருத்துக்கு நடிகை அம்பிகா கண்டனம்
|13 March 2024 8:13 PM IST
எந்த கட்சி மக்களுக்கு உதவி செய்தாலும் அதனை பாராட்ட வேண்டும் என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' குறித்து பா.ஜ.க. தேசிய மகளிரணி ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு பேசிய கருத்துக்கு தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை அம்பிகா தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
"யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ, அதனை ஏற்றுக்கொண்டு பாராட்டுங்கள். அவ்வாறு பாராட்ட முடியாவிட்டால் அமைதியாக இருங்கள். 'பிச்சை' என்று ஏன் சொல்ல வேண்டும்? 5 ரூபாய் கூட உதவியாகத்தான் இருக்கும்."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.