< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"இனி டாஸ்மாக்கில் மது வாங்கினால் பில்" - வெளியானது புது அறிவிப்பு..!
|26 Jun 2023 6:59 PM IST
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விரைவில் கணினிமயமாக்கப்பட உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விரைவில் கணினிமயமாக்கப்பட உள்ளது. இதற்காக பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல்லுக்கு டாஸ்மாக் நிறுவனம், கணினிமயமாக்கம் தொடர்பான ரூ.294 கோடி மதிப்பிலான ஆர்டரை வழங்கியுள்ளது.
இதன் காரணமாக மதுபானம் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதன் மூலமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை என்பது தடுக்கப்படும்.
விரைவில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட உள்ளதால், இனி மது வாங்கினால், பில் கிடைக்கும் என்ற நடவடிக்கையும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.