< Back
மாநில செய்திகள்
விஜயலட்சுமி என்னிடம் வந்தால் ஆலோசனை கூறுவேன் - லட்சுமி ராமகிருஷ்ணன்
மாநில செய்திகள்

விஜயலட்சுமி என்னிடம் வந்தால் ஆலோசனை கூறுவேன் - லட்சுமி ராமகிருஷ்ணன்

தினத்தந்தி
|
22 Sept 2023 8:28 PM IST

விஜயலட்சுமி என்னிடம் வந்தால் ஆலோசனை கூறுவேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது கொலை மிரட்டல், மோசடி, உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர், போலீசார் நடத்திய விசாரணையின்போது, அவசரப்பட்டு, பிறர் பேச்சை கேட்டு புகார் கொடுத்துவிட்டேன். இந்த புகாரை திரும்ப பெறுவதாக விஜயலட்சுமி எழுதிக்கொடுத்தார்.இந்தநிலையில், சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் புகாரை வாபஸ் பெற்றுவிட்ட சென்ற விஜயலட்சுமி, தற்போது சீமானுக்கு எதிராக பேசி வருகிறார்.

இன்று ஒரு வீடியோவை விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில் இது தான் எனது கடைசி வீடியோ என்றும் , இதற்கு அடுத்து நான் சாப்பிடப்போவது இல்லை, நான் சாக போகிறேன் என்றும், நான் செத்தால் அதற்கு சீமான் தான் காரணம் என்றும் கூறி உள்ளார்.

இந்த பிரச்சனை குறித்து பிரபல தொலைக்காட்சிகளில் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது, சம்பந்த பட்ட நபர்கள் என்னிடம் வந்து கேட்கும் போது அதனை பற்றி பேசலாம். அவர்கள் இல்லாத போது இதனைப் பற்றி பேசக்கூடாது. என்னுடைய நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களின் அனுமதியுடன் தான் பேசுவோம். எனவே அவர்கள் என்னிடம் வந்து பேசினால் உரிய ஆலோசனைகள் வழங்கலாம். அவ்வாறு இல்லாத போது இந்த விவகாரம் பற்றி பேசக்கூடாது, என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்