கவர்னர் தனது வேலையை மட்டும் பார்த்தால் பிரச்சனைகள் வராது: சீமான் பேச்சு
|கவர்னர் தனது வேலையை மட்டும் பார்த்தால் பிரச்சனைகள் வராது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியரின் 222வது குருபூஜை விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், "கவர்னர் அரசியல் பேசியதாலும், தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் குண்டை வீசி இருக்கலாம். கவர்னர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்சனை உருவாகியிருக்காது. ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்பாடுகளை மத்திய அரசு அப்படியே செயல்படுத்தி வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு, நீட்டுக்கு எதிராக கையெழுத்து போன்றவை ஒருபோதும் பயன்தராது. ஓட்டுக்கு பணம் கொடுக்க வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்க முடியும்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா. அரசு உயரதிகாரிகள் தமிழ் எழுத்தில் பிழை விடுவது சில இடங்களில் மட்டுமல்ல, நாடெங்கும் அப்படித்தான் உள்ளது" இவ்வாறு அவர் பேசினார்.