< Back
மாநில செய்திகள்
நல்ல திட்டங்கள் வந்தால் ஒருசில நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும் - எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
மாநில செய்திகள்

நல்ல திட்டங்கள் வந்தால் ஒருசில நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும் - எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு

தினத்தந்தி
|
12 March 2024 2:57 PM IST

நல்ல திட்டங்கள் வந்தால் ஒருசில நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும் என்று எம்.எல்.ஏ. ஒருவர் பேசியுள்ளார்.

செய்யாறு,

மேல்மா சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதை கண்டித்து கருப்பு கொடி காட்டிய விவசாயிகளுக்கு பதிலளிக்கும் வகையில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேல்மா கிராமத்தில் புதிய நியாய விலை கடை மற்றும் மேல்நீர் தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அதனை திறந்து வைத்தார். முன்னதாக மேல்மா சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதை கண்டித்து ஜோதி எம்.எல்.ஏ வரும்போது விவசாயிகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளுக்கு பதிலளித்து எம்.எல்.ஏ. ஜோதி பேசுகையில், 3,000 ஏக்கரில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. விவசாயி என்ற போர்வையில் சிலர் போராட்டம் நடத்துகின்றனர்.ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெரும் இது போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்தும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலருடைய விவசாய நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும். அதற்காக நல்ல திட்டங்களை கைவிட முடியுமா? என்று பேசினார்.

மேலும் செய்திகள்