< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது -  எல். முருகன்
மாநில செய்திகள்

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது - எல். முருகன்

தினத்தந்தி
|
12 Dec 2023 5:06 PM IST

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை என மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்துள்ளார் .

சென்னை,

மத்திய இணை மந்திரி எல். முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

கோயிலுக்கு வரும் பக்தர்களை அநாகரீகமாக நடத்துவதையும், இந்து கோயில் பாரம்பரியத்தை சீர்குலைப்பதிலும் தொடர்ந்து முழு முச்சுடன் செயல்பட்டு வரும் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல்..!

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை..!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை.

இந்துக்களை பிடிக்காத திமுக அரசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்..!

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்