< Back
மாநில செய்திகள்
அண்ணாமலை 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
மாநில செய்திகள்

அண்ணாமலை 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

தினத்தந்தி
|
16 April 2023 5:50 PM IST

பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தின்போது நோபல் ஸ்டீல் எனும் நிறுவனத்துக்கு இந்தியாவில் ரூ.1,000 கோடி முதலீட்டுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கையொப்பமிட்டார். இந்த நிறுவனத்தின் இயக்குநராக உதயநிதி இருந்து வந்துள்ளார். பின்னர் 2009 -இல் இந்தப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

பிறகு 2016-இல் இப்போதைய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்துள்ளார். இந்த நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்பந்தம் செய்துள்ளார். இதுகுறித்து விளக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்தநிலையில், திமுக சொத்து பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். வருமானவரித்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் திமுகவின் சொத்துக்கள், கடன்கள் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புகார் தெரிவித்தது போல் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை. சொத்து பட்டியல் வெளியீடு தொடர்பாக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும். மாநில தலைவர் அண்ணாமலையிடம் இருக்கும் ஆடுகள், ரபேல் கைக்கடிகாரம் பாஜகவின் சொத்தாக மாறுமா? திமுக உறுப்பினரின் சொத்துக்கள், நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது.நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என திமுகவினர் சொத்து பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க கோரி ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்