< Back
மாநில செய்திகள்
அண்ணா பிறக்கவில்லை என்றால் அண்ணாமலை ஆடு தான் மேய்த்து கொண்டிருப்பார்-ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
மாநில செய்திகள்

அண்ணா பிறக்கவில்லை என்றால் அண்ணாமலை ஆடு தான் மேய்த்து கொண்டிருப்பார்-ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு

தினத்தந்தி
|
17 Sept 2023 8:29 PM IST

அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடுதான் மேய்த்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆர்.எஸ் பாரதி கடுமையாக விமர்சித்து பேசினார்.

சென்னை,

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அண்ணா மறைந்த நாள் முதல் அவரை அண்ணா என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். அவரைவிட வயதில் மூத்தவர்கள் கூட அண்ணா என்று தான் அழைக்கிறார்கள். ஆனால் நேற்று பிறந்த அண்ணாமலை, நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலை அண்ணாதுரை என்று ஆணவமாக அழைக்கிறார். அண்ணாவைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அனுமதிக்க மாட்டோம். அண்ணாமலை தவறான புள்ளி விவரங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடுதான் மேய்த்து கொண்டிருக்க வேண்டும். ஆடு மேய்த்த அவர் இன்று ஐ.பி.எஸ். ஆக உயர்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது அண்ணா, பெரியார் போட்ட பிச்சை. அண்ணாவை பற்றி அண்ணாமலை இப்படி பேசுவதை நிறுத்தி கொள்ளாவிட்டால் தமிழ்நாடு மக்கள் வெகுண்டு எழுந்தார்கள் என்றால் அவர் கர்நாடகத்தில் பணி செய்த அதே ஊருக்கு மிக விரைவில் ஓடி போகின்ற நிலைமை வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்