< Back
மாநில செய்திகள்
விளம்பர பதாகைகள் வைத்தால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
கரூர்
மாநில செய்திகள்

விளம்பர பதாகைகள் வைத்தால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

தினத்தந்தி
|
19 Jun 2023 12:02 AM IST

விளம்பர பதாகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

புன்னம் சத்திரம், நொய்யல், தவுட்டுப்பாளையம், புகழூர், வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், மண்மங்கலம், தோட்டக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை நகராட்சி, பேரூராட்சி நிர்வாக அகற்றி வருகின்றனர். இந்தநிலையில் மீண்டும் விளம்பர பதாகைகள் வைப்பதால் நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்.

எனவே விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வரும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற வகையில் அச்சக உரிமையாளர்கள் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் அச்சடித்து கொடுத்தால், அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிந்து, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்