< Back
மாநில செய்திகள்
நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் - ஜெயக்குமார் கருத்து
மாநில செய்திகள்

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் - ஜெயக்குமார் கருத்து

தினத்தந்தி
|
2 May 2024 9:58 AM IST

எனது இல்லத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஒரு நாள்கூட செயலிழந்தது கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னை திருவிக நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார்.

அதன்பின்னர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராவில் பிரச்சினை வருகிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு போதாத காலம். எனது இல்லத்தில் கூட 26 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஒரு நாள்கூட செயலிழந்தது கிடையாது. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மட்டுமே செயலிழக்க காரணம் என்ன?; மாற்றி மாற்றி வாக்குப்பதிவு சதவீதத்தை சொல்வது தேர்தல் ஆணையத்தின் குளறுபடியாகத்தான் உள்ளது.

தொழிலாளர் தினத்தில் பிறந்த சகோதரர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக அஜித்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான நன்றியை நான் சொல்வேன். அவர் ஒரு தைரியசாலி; கோழைகளை எனக்கு பிடிக்காது. தைரியசாலியை தான் பிடிக்கும். விடாமுயற்சி திரைப்படம் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகள் என்று கூறினார்.

இதற்கிடையில் செய்தியாளர் ஒருவர் நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் அதை விரும்புவீர்களா? என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ‛‛நல்லது செய்வதற்கான பரந்த களம் என்பது அரசியல்தான். அப்படிப்பட்ட களத்திற்கு அஜித்குமார் வந்தால் கண்டிப்பாக நாங்கள் வரவேற்போம்'' என்று கூறினார்.

மேலும் செய்திகள்