< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"காலை உணவில் இட்லி, தோசை வழங்கவேண்டும்" -மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்
|14 Feb 2023 5:53 PM IST
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், கல்குறிச்சி அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர்,
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் இட்லி, தோசை வழங்க வேண்டும் என ஆய்வுக்கு சென்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், கல்குறிச்சி அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செவ்வாய்க்கிழமை தோறும் வழங்கப்படும் ரவை கிச்சடியுடன் சட்னி அல்லது சாம்பார் கொடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அதே பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் காலை உணவில் இட்லி, தோசை வழங்க வேண்டும் என தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், இந்த கோரிக்கையை முதலமைச்சரிடம் கண்டிப்பாக தெரிவிப்பேன் என்று மாணவர்களிடம் உறுதி அளித்தார்.