< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை
|9 July 2023 12:15 AM IST
திருக்கோவிலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை கோட்டாட்சியர் வழங்கினார்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தாசில்தார் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக திருக்கோவிலூர் தாலுகாவை சேர்ந்த சுமார் 500 பேர் அடையாள அட்டை வேண்டி மனு அளித்திருந்தனர். இதில் தகுதியான பயனாளிகளை டாக்டர் சிவராமன், தனி தாசில்தார் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் சதீஷ் ஆகியோரை கொண்ட குழுவினர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.