< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தியாகம் செய்தா சிறைக்கு சென்றார் செந்தில் பாலாஜி? சீமான் கேள்வி
|26 Sept 2024 1:07 PM IST
செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால்.. நாட்டுக்காக சிறைக்கு சென்றவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது? என சீமான் பேசினார்.
சென்னை,
செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் அளித்துள்ளதற்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் ,செந்தில் பாலாஜியின் தியாகம் பெரியது என்றும் கூறியிருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனங்களை வைத்திருக்கிறார்.
இது குறித்து சீமான் கூறியதாவது:-செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டா சிறைக்கு சென்றார். செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால்.. நாட்டுக்காக தியாகம் செய்து விட்டு சிறைக்கு சென்றவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது? செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதே திமுக போட்ட வழக்கில்தான்"என்றார். மேலும், விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியது குறித்து பேசிய சீமான், பெரியாருக்கு மாலையிட்டதால் திராவிடக் கொள்கையை விஜய் கையில் எடுப்பதாக அர்த்தமா? என்றும் கேள்வி எழுப்பினார்.