< Back
மாநில செய்திகள்
ஐ.பி.எம். குவாண்டம் நெட்வொர்க்கில் சென்னை ஐ.ஐ.டி. இணைந்தது
மாநில செய்திகள்

ஐ.பி.எம். குவாண்டம் நெட்வொர்க்கில் சென்னை ஐ.ஐ.டி. இணைந்தது

தினத்தந்தி
|
13 Sept 2022 3:15 AM IST

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கான குவாண்டம் திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் முன்னெடுக்கிறது.

சென்னை:

இந்தியாவில் குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், ஐ.பி.எம். குவாண்டம் நெட்வொர்க்கில் முதல் இந்திய கல்வி நிறுவனமாக சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் இணைந்திருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கான குவாண்டம் திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் முன்னெடுக்கிறது.

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி கூறுகையில், குவாண்டம் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் ஐ.பி.எம். உடன் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். சென்னை ஐ.ஐ.டி.-யில் ஐ.பி.எம். குவாண்டம் கண்டுபிடிப்பு மையத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்'', என்றார்.

ஐ.பி.எம். இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சந்தீப் பட்டேல் கூறும்போது, ''கம்ப்யூட்டிங்கை பொறுத்தவரை உலகளவில் சக்தி மிகுந்த நாடாக இந்தியாவை மேலும் முன்னேற்றவும், எதிர்காலத்துக்கான இந்தியாவை தயார்படுத்தவும் எங்கள் முழு பங்களிப்பை வழங்குவோம்'',என்றார்.

மேலும் செய்திகள்