< Back
மாநில செய்திகள்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
மாநில செய்திகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தினத்தந்தி
|
20 Dec 2023 3:10 AM IST

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு சாலைப்பிரிவு திட்டம் 2-ன் திட்ட இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

சென்னை,

தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் டி.என்.வெங்கடேஷ், பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையராக மாற்றப்பட்டார். அவர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் அலுவல் சாரா மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையர் அனில் மேஷ்ராம், தமிழ்நாடு கனிமங்கள் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு சாலைப்பிரிவு திட்டம் 2-ன் திட்ட இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்