< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி உயர்வு -  தமிழக அரசு உத்தரவு
மாநில செய்திகள்

தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
22 Aug 2022 6:50 PM IST

தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 34 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. 1.7.2022 முதல் கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போன்று தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ். போன்ற அகில இந்திய பணி அலுவலர்களுக்கும் 1.7.2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டது போன்று தமிழகத்தில் பணியில் உள்ள இந்திய பணி அலுவலர்களுக்கும் 1.1.2022 முதல் 30.6.2022 வரையிலான அகவிலைப்படியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்