< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
கரூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
15 Aug 2023 12:11 AM IST

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகிற 19-ந்தேதி கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந்தேதி குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும். இந்த உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக போட்டோ 4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்