< Back
மாநில செய்திகள்
ஈரோடு-பழனி ரெயில் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்வேன் - மத்திய இணை மந்திரி உறுதி
மாநில செய்திகள்

'ஈரோடு-பழனி ரெயில் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்வேன்' - மத்திய இணை மந்திரி உறுதி

தினத்தந்தி
|
1 March 2023 12:50 AM IST

ஈரோடு-பழனி ரெயில் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்வதாக மத்திய ரெயில்வேத்துறை இணை மந்திரி தர்ஷனா விக்ரம் சர்தோஷ் உறுதியளித்தார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் மண்டபத்தில், கழிவு பஞ்சாலை சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வேத்துறை இணை மந்திரி தர்ஷனா விக்ரம் சர்தோஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவது பெருமையான விஷயம் என்று கூறினார். மேலும் ஈரோடு-பழனி ரெயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று அவர் உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்