விருதுநகர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன்
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று மின்வாரியத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.
சிவகாசி,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று மின்வாரியத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.
அடிக்கல்நாட்டு விழா
சிவகாசி மாநகராட்சிக்கு ரூ.10 கோடி செலவில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூமிபூஜை சிவகாசி- சாத்தூர் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேயர் சங்கீதா இன்பம் தலைமை தாங்கினார்.
துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் முன்னிலை வகித்தார். கமிஷனர் சங்கரன் வரவேற்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிறைவேற்றுவேன்
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை கேட்டுக்கொண்டார். அவரது நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றி தரும் வகையில் மின்சாரத்துறை செயல்படும். பெண்களுக்கான மாதம் ரூ.1,000 உரிமைத் தொகையை வருகிற செப்டம்பர் மாதம் முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதற்கான பூர்வாங்க பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன், ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், தாசில்தார் லோகநாதன், யூனியன் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ், மண்டல தலைவர் சேவுகன், கவுன்சிலர்கள் சேதுராமன், வெயில்ராஜ், பாக்கியலட்சுமி, மகேஸ்வரி கணேசன், ராஜேஷ், ரவிசங்கர், தங்க பாண்டிசெல்வி, ஜெயராணி, சசிகலா, அசோக்குமார், தி.மு.க. நிர்வாகிகள் வனராஜா, உதயசூரியன், இன்பம், தினேஷ்மாறன், காளிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.