< Back
மாநில செய்திகள்
ரெயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
மாநில செய்திகள்

ரெயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

தினத்தந்தி
|
11 Oct 2024 11:50 PM IST

மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சரக்கு ரெயில் மீது மோதியது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில்,முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரெயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தகவல் கிடைக்கப்பெற்றவுடன்,அமைச்சர் நாசர் அவர்களையும் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன். மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. விபத்துக்குள்ளான ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்