< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பிரதமரை சந்தித்த போது பேசியது என்ன? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
|4 Jan 2024 6:57 PM IST
இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
புதுடெல்லி,
கேலா இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். கேலா இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க இருவருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்கக்கோரி முதல்-அமைச்சர் சார்பாக பிரதமரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.