< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ்
மாநில செய்திகள்

ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தினத்தந்தி
|
8 Oct 2023 6:27 AM IST

ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி,

திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வந்த வேளையில், ஆசிரியர்கள் போராட்ட நிகழ்வு நடைபெற்றது. இதற்கு விளக்கமளிக்க இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொள்கிறேன். பள்ளிக்கல்வித்துறை அறிவித்த 53 திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம்.

ஆசிரியர்களின் போராட்டத்தை தவறாக நினைக்கவில்லை. ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன். ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறையும் உறவினர் போன்றவர்கள். போராட்டங்களால் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும், ஆசிரியர்களுக்கு வேண்டியதை செய்வது தி.மு.க. ஆட்சியில் தான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்