< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து அமித்ஷாவிடம் பேசினேன் - அண்ணாமலை
மாநில செய்திகள்

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து அமித்ஷாவிடம் பேசினேன் - அண்ணாமலை

தினத்தந்தி
|
24 March 2023 9:20 AM IST

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து அமித்ஷாவிடம் பேசினேன்.

மதுரை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது,

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். பாஜகவுக்கு எனக்கும் தனிப்பட்ட தலைவர்கள், கட்சி மீது மோதல் இல்லை. பாஜக வேகமாக வளர வேண்டும் என நாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம்.

கட்சியை வலுப்படுத்த நினைக்கும் போது ஒரு சில மனஸ்தாபங்கள் வருவது வழக்கம் தான். கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பாஜக வளர வேண்டும் என்பதே நோக்கம்.

கூட்டணி குறித்து மத்திய குழு தான் முடிவு செய்யும். கூட்டணியில் இருந்தாலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சி வளர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதுபோல் தான் பாஜகவும் வளரவேண்டும் என நினைக்கிறது.



மேலும் செய்திகள்