< Back
மாநில செய்திகள்
உண்மையை பேசினேன், அதனால் நீக்கப்பட்டு உள்ளேன் - காயத்ரி ரகுராம் வேதனை
மாநில செய்திகள்

உண்மையை பேசினேன், அதனால் நீக்கப்பட்டு உள்ளேன் - காயத்ரி ரகுராம் வேதனை

தினத்தந்தி
|
22 Nov 2022 3:58 PM IST

காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சென்னை,

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாக பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகவும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம் ;

கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன் ; வெளிநாடுகளில் சிக்கியவர்களை சொந்த செலவில் மீட்டுள்ளேன் .சமீபத்தில் கட்சிக்கு வந்தவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தம் என்னிடம் விளக்கம் கேட்காமல் பொறுப்பில் இருந்து நீக்கியது வேதனையாக உள்ளது.என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.ஒரு பெண்ணாக, பெண்களுக்கு

குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை.கட்சி பொறுப்பு இல்லையென்றாலும் நான் பாஜக தொண்டர் தான்.பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன் .மேலிடம் அழைக்கும்போது, தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன். இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்