< Back
மாநில செய்திகள்
தென்னிந்திய அரசியலின் மூத்த முன்னோடி பெரியாரின் புகழை போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

தென்னிந்திய அரசியலின் மூத்த முன்னோடி பெரியாரின் புகழை போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
24 Dec 2023 12:30 PM IST

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை,

தந்தை பெரியாரின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பெரியாரின் நினைவு நாளில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரை நினைவு கூர்ந்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில், மூடநம்பிக்கைகளால் மூழ்கிக் கிடந்த நம் சமூகத்தை விழித்தெழ வைத்த பகுத்தறிவாளர், சாதி, மத ரீதியான சமூக தீண்டாமைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்த புரட்சியாளர், நாடெங்கும் சமத்துவம் நிலவ போராடிய மாபெரும் தலைவர், தென்னிந்திய அரசியலின் மூத்த முன்னோடி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன், என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்