< Back
தமிழக செய்திகள்
நேதாஜியின் வீரத்தையும் புகழையும் போற்றி வணங்குகிறேன்- எடப்பாடி பழனிசாமி
தமிழக செய்திகள்

நேதாஜியின் வீரத்தையும் புகழையும் போற்றி வணங்குகிறேன்- எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
23 Jan 2024 5:57 PM IST

நேதாஜியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

நேதாஜியின் பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"ஆங்கிலேய ஆட்சியை பெரும் சினம் கொண்டு எதிர்த்து, நாட்டின் விடுதலைக்காக தன்னலமற்ற தியாக வீரர்களை ஒன்று திரட்டி மாபெரும் இந்திய ராணுவத்தைக் கட்டமைத்து, இந்திய மண்ணில் சுதந்திரத்திற்காக வீர முழக்கமிட்டு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக துளியளவும் அச்சமின்றி போராடிய பெரும் ஆளுமைமிக்க தேசத் தலைவர் நேதாஜி அவர்களின் பிறந்தநாளில் அவரின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்." என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்